இந்திய மாநிலம் ஒன்றில் தங்க படிமங்கள் கண்டுபிடிப்பு.., தங்கச் சுரங்கங்களுக்கு ஏலம் விட அரசு திட்டம்
இந்திய மாநிலம் ஒன்றில் பல மாவட்டங்களில் தங்க படிமங்கள் இருப்பது முதல் முறையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தங்கப் படிமங்கள் கண்டுபிடிப்பு
இந்திய மாநிலமான ஒடிசாவில் பல மாவட்டங்களில் தங்க படிமங்கள் இருப்பது முதல் முறையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் சுரங்கத் துறை அமைச்சர் பிபூதி பூஷண் ஜெனா பேசுகையில், "ஒடிசாவில் உள்ள சுந்தர்கர், நபாரங் பூர், அங்குல், கோராபுட் ஆகிய மாவட்டங்களில் முதல் முறையாக தங்கப் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தியோகர் பகுதியில் இதனை தோண்டி எடுப்பதற்கான ஏலம் விடப்படவுள்ளது. மேலும், மால்கன்கிரி, சம்பல்பூர், போத் ஆகிய மாவட்டங்களிலும் தங்கப் படிமங்கள் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கியோன்ஞ்சர், மயூர் பஞ்ச் ஆகிய இடங்களில் தங்கப் படிமங்கள் இருக்கிறதா என்பதை கண்டறியவும் அகழ்வாய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதில், மயூர் பஞ்ச் பகுதியில் உள்ள ஜஷிபூர், சரியாகுடா, ருவான்சி, ஐடெல்குச்சா, மரிதிஹி, சுலிபட், பதம்பஹத் ஆகிய இடங்களில் தங்கப் படிமங்கள் இருப்பதை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் ஒடிசா மாநிலம் தங்கச் சுரங்கத்தின் கேந்திரமாக மாறும். அதன் பொருளாதாரமும் கணிசமாக அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், ஒடிசா மாநில அரசு முதல் முறையாக தங்கச் சுரங்கங்களுக்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |