புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாற்றிலேயே அதிக உயர்வை எட்டியுள்ளது.
MCX தங்கம் 10 கிராம் ரூ.1.80 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேசமயம், MCX வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.4.07 லட்சம் என்ற சாதனை விலையை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 5,591.16 டொலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதுடன், வெள்ளி 119.34 டொலர் வரை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 64 சதவீதம் உயர்வு கண்ட தங்கம், இவ்வாண்டு மட்டும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை 60 சதவீதம் உயர்வை பதிவு செய்துள்ளது.

இந்த விலை உயரவுக்கான முக்கிய காரணங்கள்:
அமெரிக்க மத்திய வங்கி (US Fed) வட்டி விகிதங்களை நிலைநிறுத்தியதனால், டொலர் பலவீனமடைந்துள்ளது.
டொனால்டு ட்ரம்ப்-ஈரான் பதற்றம் உள்ளிட்ட புவிசார் அரசியல் சூழல்கள்.
மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி சேமிப்பது.
விநியோகக் குறைபாடு காரணமாக வெள்ளி விலை வேகமாக உயர்ந்தது.
நிபுணர்கள், 10 கிராம் தங்கம் ரூ.2 லட்சம் வரை செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், வெள்ளி விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர்.
ஆனால், அதிக விலையில் தங்கம்-வெள்ளி வைத்திருப்பது Opportunity Cost எனப்படும் அபாயத்தை உருவாக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் அதிக லாபம் தரும் நிலையில், உலோகங்களில் முதலீடு செய்வது நீண்டகால வரி சலுகைகளை வழங்காது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம்-வெள்ளி விலை உயர்வு, இந்திய முதலீட்டாளர்களுக்கு புதிய சவாலாகவும், பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாகவும் மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gold price today India MCX, Silver price today India MCX, Gold hits Rs.1.80 lakh per 10 gm, Silver tops rs 4 lakh per kg India, MCX gold silver live rates 2026, US Fed impact on gold prices, Donald Trump tariffs gold silver, Gold ETF silver ETF India news, Indian commodities market update, Gold silver investment trends India