ஐக்கிய அமீரகம், ஓமன், சிங்கப்பூரை விட இந்தியாவில் மலிவான விலையில் தங்கம்
ஓமன், கத்தார், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முதன்மையான சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கத்தின் விலை மிகவும் மலிவானதாக உள்ளது என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அமைதியற்ற நிலை
இதற்கு காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் மற்றும் அமைதியற்ற நிலை என்றே கூறுகின்றனர். போர் சூழல் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
தேவை அதிகரிப்பால், மத்திய கிழக்கில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியச் சந்தையில் தங்கம் வாங்குவது வணிகர்களின் முதன்மை தெரிவாக மாறியுள்ளது.
இருப்பினும் சர்வதேச நகர்வுகளைப் பொறுத்து இந்தியாவில் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது. மட்டுமின்றி கடந்த மூன்றாண்டுகலில் இல்லாத வாராந்திர சரிவையும் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் தங்கத்தின் ஸ்பாட் விலைகள் 4.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது, இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு டிராய் அவுன்ஸ் 2,563.25 டொலரை எட்டியது.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது
தற்போது, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,582.3 ஆக உள்ளது. இதில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 6,952 என விற்பனையாகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு 3027.50 திர்ஹாம் எனவும் 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு 2802.50 திர்ஹாம் எனவும், 18 காரட் தங்கம் 10 கிராமுக்கு 2327.50 திர்ஹாம் எனவும் விற்பனையாகிறது.
துபாயில் 22 மற்றும் 24 காரட் தங்கத்திற்கு 10 கிராமுக்கு 2.50 திர்ஹாம் என விலை முந்தைய நாளை விட சற்று குறைந்துள்ளது. சிங்கப்பூரில், இந்தியாவுடன் ஒப்பிடும்போது விலையும் அதிகமாக உள்ளது 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ 76,805 என பதிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |