ரூ.6 கோடி மதிப்பில் தங்க நகைகள், செல்போனுக்கு தங்க உறை.., மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா
மகா கும்பமேளாவிற்கு ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் அணிந்து வந்த தங்க பாபா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தங்க பாபா
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அந்தவகையில், கோல்டன் பாபா’ (தங்க பாபா) என்பவர் அகாடாவில் முகாமிட்டுள்ளனர். இவரை பார்ப்பதற்கே தனி கூட்டம் அதிகரித்து வருகிறது.
இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே.நாரயண் கிரி ஆவார். இவர் தற்போது ஆன்மீக பணிகளுக்காக டெல்லியில் இருந்து வருகிறார்.
தனது கழுத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க அணிகலன்கள், 10 விரல்களிலும் தங்க மோதிரங்கள், செல்போனுக்கு தங்க உறை என மின்னுகிறார்.
இவர் இவ்வளவு தங்கத்தை அணிந்த பின்னரும் ஆன்மிகத் துறவியாகத் தன்னை முன்னிறுத்துகிறார். இவரின் தோற்றத்தின் காரணமாக இவரை பார்ப்பதற்கு பலரும் வருகின்றனர்.
தங்க பாபா பேசுகையில், "தேசத்தை காக்கும் பிரதமராக நரேந்திர மோடியும், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத்தும் இரண்டு துறவிகளாக ஆட்சி புரிகின்றனர்.
இவர்களால் தான் நாம் மகா கும்பமேளாவில் எந்த கவலையுமின்றி இருக்கிறோம். நாம் அவர்களுக்கும், சனாதனத்துக்கும் ஆதரவளிப்பதை தொடர வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |