வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்க விலை - உலக சந்தையின் நிலை என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி அச்சுறுத்தல்களால் உலகளாவிய வர்த்தகப் போர் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்க விலை
பங்கு வர்த்தகத்தில் தங்கம் 0.5% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 2,945.83 டொலராக உயர்ந்தது.
அதிகரித்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார பழு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்க ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டிலும் தங்கம் 0.9% அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு 2,963.80 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதே போல், இந்தியாவிலும் 99.9 சதவீத 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.89,400 ஆக இருந்தது. 99.5 சதவீத 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.89,050 ஆக உயர்ந்துள்ளது.
விலை உயர்ந்ததற்கான காரணம்
உலகளாவிய பணவீக்க அபாயங்கள் குறித்த முதலீட்டாளர்களின் கவலையே விலை உயர்வுக்கு பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த அச்சத்தின் காரணமாக பலரும் தங்கத்தை நாடி சென்றுள்ளனர்.
ஜனாதிபதி டிரம்பின் சீன இறக்குமதிகள் மீதான 10% வரி மற்றும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான 25% வரி பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளன.
மரக்கட்டைகள், கார்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் மருந்துகள் மீதான கூடுதல் வரிகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. இது சந்தைகளை மேலும் பாதிக்கும்.
ஃபெடரல் ரிசர்வ் நிறுவனத்தின் சமீபத்திய கூட்டத்தில் இந்த வர்த்தகக் கொள்கைகள் காரணமாக பணவீக்கம் அதிகரிப்பது குறித்த எதிர்பார்ப்பும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தங்க விலை விரைவில் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 டொலரை எட்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |