புதிய உலக சாதனை படைத்த தங்கத்தின் விலை: வட்டி விகிதத்தை குறைத்த பெடரல் வங்கி
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உச்சம் தொட்ட தங்கம் விலை
தொடர்ச்சியான விலை ஏற்றங்களின் விளைவாக மதிப்புமிக்க உலோகமான ஒரு அவுன்ஸ் தங்கம் அதிகாரப்பூர்வமாக $4,400 என்ற விலையை தாண்டிய புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்காவின் பணவியல் கொள்கையில் ஏற்பட்ட புதிய மாற்றங்களே தங்கத்தின் இந்த பிரம்மாண்ட விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது வட்டி விகிதங்களை 0.25% குறைத்து இருப்பதால், தங்கம் போன்ற சொத்துக்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து உள்ளது.
விலை உயர்வில் தங்கம் முதன்மையாக இருந்தாலும் வெள்ளி, பிளாட்டினம் போன்ற பிற உலோகங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
பெடரல் வங்கி தன்னுடைய வட்டி விகிதங்களை குறைத்தால், இந்த காலாண்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |