ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை ரூ.95,000 கடந்து, ரூ.1 லட்சத்தை நெருங்கி வருகிறது.
தங்கத்தின் விலை இந்தியாவில் தற்போது சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இன்று (வியாழன்), 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.95,580 ஆகவும், 22 காரட் தங்கத்தின் விலை ரூ.87,860 ஆகவும் உள்ளது.
உலக சந்தையில் தங்கம் 3,333 அமெரிக்க டொலர் என்ற உச்ச நிலைக்கு சென்றுள்ளது.
தங்க விலை உயர்ந்து வருவதற்கான முக்கிய காரணங்கள்:
- அமெரிக்கா-சீனா வர்த்தக போர்
- அமெரிக்க டொலரின் வீழ்ச்சி
- அமெரிக்க கருவூல சந்தையில் (US Treasury market) நிலவும் நம்பிக்கையின்மை
இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பான வழியாக பார்க்கிறார்கள்.
சீனாவின் தங்கம் சேமிப்பு
2025-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மட்டும் சீனா 12.8 டன்னுகள் தங்கம் வாங்கியுள்ளது. சீனாவின் மொத்த நிதிசேமிப்பு $3.5 டிரில்லியனாக உயர்ந்துள்ளது, இது தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் ஒரு முக்கிய காரணமாகும்.
அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரம்
அமெரிக்காவின் புதிய சுங்கக் கட்டணங்கள், வளர்ச்சி மந்தம், மற்றும் உயரும் பணவீக்கம் ஆகியவை தங்கத்தின் மதிப்பை அதிகரிக்கச் செய்கின்றன.
அமெரிக்க மத்திய வங்கி தலைவரின் எச்சரிக்கை
அமெரிக்க மத்திய வங்கி தலைவர் பவுல் (Jerome Powel) கூறுகையில், சுங்கக் கட்டணங்கள் உயர்ந்தால் பணவீக்கம் மேலும் உயரும், வளர்ச்சி மந்தமாகும், இது stagflation எனப்படும் நிலையை உருவாக்கும். இந்நிலையில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக விளங்கும்.
உலகளவில் பணவீக்கம் குறையும் சூழ்நிலையால், 2025-ஆம் ஆண்டு வட்டிவிகிதங்களை குறைக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு தங்க விலையை மேலும் உயர்த்தும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |