2026-ல் விலை உயரும் தங்கம் - நிபுணர்கள் நம்பிக்கை
2025-இல் உலகின் மிகச் சிறந்த முதலீட்டு சொத்துகளில் ஒன்றாக திகழ்ந்த தங்கம், 2026-இல் மேலும் வலுவான வளர்ச்சியை காணும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
PL Capital வெளியிட்ட அறிக்கையில், தங்கத்தின் நிலை மிதமானது முதல் வலுவான விலையேற்றத்துடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சந்தை நிலை
2025-இல் தங்கம் 65 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. அதேசமயம் வெள்ளி 132 சதவீதம் உயர்வு பெற்று முன்னிலை பெற்றது.
வெள்ளி விலை அதிகரித்ததால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் மீண்டும் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் தங்கத்தின் விலை உயர்ந்தது.

தற்போதைய விலை
Spot gold 0.4 சதவீதம் உயர்ந்து 4,347.07 டொலராக உள்ளது.
US gold futures 0.5 சதவீதம் உயர்ந்து 4,387.3 டொலராக முடிவடைந்தது.
Platinum 3.1 சதவீதம் உயர்ந்து 1,975.51 டொலருக்கு சென்றது. இது 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலை ஆகும்.
Palladium 0.8 சதவீதம் உயர்ந்து 1,709.75 டொலருக்கு சென்றது. இது 3 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த நிலை.
பொருளாதார காரணிகள்
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் பொருளாதார விலை உயர்வு 2.7 சதவீதம் மட்டுமே. இது எதிர்பார்த்த 3.1 சதவீதத்தை விட குறைவானது.
வேலை இழப்பு விகிதம் 4.6 சதவீதமாகக உயர்ந்துள்ளது. இது 2021-ற்கு பிறகு மிக அதிகமானது.
இந்த தரவுகள், வட்டி விகிதக் குறைப்புக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
2026-இல் தங்கம், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் லாபகரமான சொத்து எனத் திகழும் வாய்ப்பு அதிகம். வெள்ளி, பிளாட்டினம், பாலடியம் ஆகியவற்றின் விலை உயர்வும், தங்கத்தின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gold price prediction 2026 Economic Times report, Spot gold 4,347 US Dollars futures 4,387 dollars US Fed cuts, Silver vs gold 2025 performance, PL Capital gold outlook moderately positive 2026, US inflation 2.7 percent unemployment 4.6 percent impact gold, Platinum 17-year high 1,975 dollars Palladium 1,709 US Dollars, Gold investment safe haven asset 2026 forecast, Global investors gold vs silver spread tightening, US Federal Reserve interest rate cut expectations, Precious metals weekly gains gold silver platinum