2013-ம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்த தங்க விலை
கடந்த ஒரு வருடமாக கடும் உயர்வைக் கண்ட தங்கத்தின் விலை தற்போது சில திருத்தங்களைக் காண்கின்றன.
தங்க விலை சரிவு
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்க விலையானது மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. அக்டோபர் 2025 இல் ஒரு அவுன்ஸ் 4,000 டொலருக்குக்கு அருகில் இருந்து ஒரு நாளுக்குள் 6.3 சதவீதம் வரை சரிந்தது.
தீபாவளிக்கு முன்பு, தங்கம் அதன் வரலாறு காணாத உயர்வாக 10 கிராமுக்கு ரூ.1,32,000 ஐ எட்டியது. ஆனால் இப்போது அது 10 கிராமுக்கு ரூ.1,28,000 ஆக விற்பனையாகிறது. இது கிட்டத்தட்ட ரூ.4,000 அல்லது 3 சதவீதம் சரிவு.
செவ்வாய்க்கிழமை 5.3 சதவீத சரிவைத் தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை தங்கம் 1.4 சதவீதம் சரிந்தது.
கடந்த ஒரு வருடமாக, இந்திய சந்தையில், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75,000 லிருந்து ரூ.1.3 லட்சமாக உயர்ந்துள்ளது.
அகில இந்திய ரத்தினக் கற்கள் மற்றும் நகை உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் ராஜேஷ் ரோக்டே, ஒருதலைப்பட்சமான ஏற்றத்திற்குப் பிறகு தங்கத்தின் விலையில் சமீபத்திய திருத்தம் எதிர்பார்க்கப்பட்டது என்றும், தங்கத்தின் விலை ஏற்றத்துடன் இருப்பதால், இந்த திருத்தம் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
இரண்டு மாதங்களில், தங்கத்தின் விலை சுமார் 25 சதவீதம் உயர்ந்தது. இது, அமெரிக்க கடன், பணவீக்கம் மற்றும் பெடரல் ரிசர்விலிருந்து வட்டி விகிதக் குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்த அச்சங்களால் உயர்ந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |