வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம்! இலங்கை மதிப்பில் இவ்வளவா
தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
தங்கத்தின் விலையில் மாற்றம்
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு இடையே வரி விதிப்பு மோதல் அதிகரித்ததால் உலகளவில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதால், அதன் விலை இமாலய அளவில் ஏறி வருகிறது.
கடந்த 3 நாட்களில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
புதிய உச்சம்
நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்த தங்கம், நேற்று ரூ.1,480 ஆக உயர்ந்து சவரன் ரூ.69,960க்கு (இலங்கை மதிப்பில் 242,445.61 ரூபாய்) விற்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இன்னும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,000த்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.8,770 மற்றும் ஒரு சவரன் ரூ.70,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது இலங்கை மதிப்பில் 243,138.71 ரூபாய் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |