தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தருமான முகேஷ் அம்பானியின் இளைய மருமகள் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அம்பானியின் மருமகள்
நீதா மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோரின் திருமண சடங்குகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
ராதிகா மெர்ச்சன்ட்டின் அழகான புடவை தோற்றம் அனைவராலும் அதிகம் ஈர்கப்பட்டு இருக்கிறது.
மெர்ச்சன்ட்டின் சில சிறந்த புடவை தோற்றத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்க புடவை முதல் வைர புடவை வரை
தங்க புடவை
இந்த புடவையை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார். இந்த புடவையில் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த புடவையின் விலை லட்சங்களில் இருக்கும் என நினைப்பீர்கள். ஆனால் இல்லை. இந்த புடவையின் விலை கோடிகளாகும். இந்த அழகான புடவையை தனது இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு பரிசாக நீதா அம்பானி வழங்கியுள்ளார்.
கருப்பு புடவை
கறுப்பு மிகவும் கம்பீரமான தோற்றத்தை அனைவருக்கும் வழங்கும். ராதிகா அணிந்திருந்த இந்த புடவை கடைகளில் இலகுவாக கிடைக்கும். இந்த அழகான செயின்மெயில் புடவை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வைர புடவை
இந்த அழகான புடவையில் பல்வேறு வகையான கிரிஸ்டல் வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அழகான புடவையை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்துள்ளார்.
மலர் துப்பட்டா
உண்மையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான பூக்கள் துப்பட்டாவை ராதிகா அணிந்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மெர்ச்சண்டிற்காக துப்பட்டாவை மும்பையைச் சேர்ந்த ஸ்ருஷ்டி கல்கத்தாவாலா என்பவர் வடிவமைத்துள்ளார். சுமார் இரண்டு கிலோ மஞ்சள் சாமந்தி மற்றும் மணம் மிக்க புதிய மல்லிகை மொட்டு வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய துப்பட்டாக்களின் விலை ரூ. 15,000 முதல் தொடங்குகிறது.
லெஹங்கா
ராதிகா லெஹங்கா (Lehenga) ஆடையை அணிந்துள்ளார். அதில் துர்கா வசனம் எழுதப்பட்டு பனாரசி துணியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. மாமேரு விழாவிற்காக ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையை ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |