அமெரிக்க வட்டி விகிதம் குறைப்பால் தங்கம் சரிவு - வெள்ளி புதிய சாதனை
அமெரிக்க மத்திய வங்கி சமீபத்தில் எடுத்த வட்டி விகிதக் குறைப்பு முடிவு உலகளாவிய சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது.
ஆனால், இந்த முடிவு பிளவுபட்ட வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதால், சந்தையில் குழப்பம் நிலவுகிறது.
இதன் தாக்கமாக தங்கத்தின் விலை 0.3 சதவீதம் குறைந்து 4,216.49 டொலராக பதிவாகியுள்ளது. அதேசமயம், அமெரிக்க தங்க வர்த்தக எதிர்கால ஒப்பந்தங்கள் 0.5 சதவீதம் உயர்ந்து 4,244.40 டொலராக உயர்ந்துள்ளன.

சந்தை நிபுணர்கள், "வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்பில் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. முடிவு வந்ததும், லாபம் எடுக்க சிலர் விற்பனை செய்ததால் விலை குறைந்தது. ஆனால், தங்கத்தின் அடிப்படை நிலைமை வலுவாகவே உள்ளது” எனக் கூறியுள்ளனர்.
மத்திய வங்கி, அடுத்தடுத்த வட்டி குறைப்புகள் குறித்து எவ்வித உறுதியும் அளிக்கவில்லை. 2026-ல் ஒரே ஒரு வட்டி குறைப்பு மட்டுமே இருக்கும் என பெரும்பாலான கொள்கை நிர்ணயர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வெள்ளி விலை 0.6 சதவீதம் உயர்ந்து 62.16 டொலராகவும், அதற்கு முன்பு 62.88 டொலர் என்ற வரலாற்றுச் சாதனை எட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டில் வெள்ளி விலை 115 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. தொழில்துறை தேவைகள் அதிகரித்ததும், கையிருப்பு குறைந்ததும், மேலும் வெள்ளி அமெரிக்காவின் முக்கிய கனிமப் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளது.
மற்ற விலையுயர்ந்த உலோகங்களில், பிளாட்டினம் 0.5 சதவீதம் உயர்ந்து 1,665.99 டொலராகவும், பல்லாடியம் 0.9 சதவீதம் குறைந்து 1,463.97 டொலராகவும் பதிவாகியுள்ளது.
முதலீட்டாளர்கள், வரும் டிசம்பர் 16-ஆம் திகதி வெளியாகும் வேலைவாய்ப்பு மற்றும் வேலை இழப்பு தரவுகளை கவனித்து, அடுத்தடுத்த வட்டி கொள்கை மாற்றங்களை கணிக்க முயல்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gold prices ease after Fed rate cut, Silver hits record high 62.88 dollars 2025, Fed divided vote interest rate cut, US gold futures February delivery rise, Spot gold falls 4,216 dollars per ounce, Silver industrial demand 115 percent surge, Platinum and palladium price trends, US critical minerals list silver boost, Trump says Fed cut should be larger, Investors eye US payrolls December 16