பேனா ரிஃபில்-லில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள்: மும்பை சுங்கத் துறை அதிகாரிகள் அதிரடி
பேனா ரிஃபில் மற்றும் உடைகளில் தங்கத்தை மறைத்து கடத்த முயன்ற 6 இந்தியர்களை மும்பை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தங்க கடத்தல்
Dubai, Sharjah மற்றும் Jeddah. ஆகிய 3 வளைகுடா நாடுகளில் இருந்து வந்த 6 இந்தியர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 பேரும் 5 கிலோ தங்க துகள்களை மெழுகு போல் உருக்கி அதை ஆடைகள் மற்றும் பேனா ரிஃபில் ஆகியவற்றில் தங்க சங்கிலிகள் மற்றும் கம்பிகளை மறைத்து தந்திரமாக விமானத்தில் தந்திரமாக எடுத்து வந்துள்ளனர்.
இருப்பினும், அவர்களின் தந்திரமான யுக்திகள் மும்பை சுங்க அதிகாரிகளின் கண்களில் இருந்து தப்ப முடியவில்லை.
இறுதியில் ஷார்ஜாவிலிருந்து 3 பேரும், துபாயிலிருந்து 2 பேரும், Jeddah-விலிருந்து 1 நபரும் என மொத்தம் 6 பேரையும் சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அதிகரிக்கும் கடத்தல் சம்பவம்
மும்பை விமான நிலையத்தில் ஜூலை 1 முதல் 9 வரை கண்டறியப்பட்ட 22 கடத்தல் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
During 1–9 July, 2024, Airport Commissionerate, Mumbai Customs Zone-III seized over 16.01 Kg Gold valued at Rs. 10.08 Cr & Foreign Currency valued at Rs. 0.48 Cr across 22 cases. Gold was found concealed in clothes, in refills of pen, on the body & in body. Six Pax were arrested. pic.twitter.com/KkzjVsK6gl
— Mumbai Customs-III (@mumbaicus3) July 10, 2024
இந்த காலகட்டத்தில், சுங்க அதிகாரிகள் ₹10 கோடி மதிப்பிற்கும் மேற்பட்ட 16 கிலோ தங்கத்தையும், ₹50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களையும் பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
மேலே குறிப்பிடப்பட்ட தந்திரமான முறைகள் தவிர, லக்கேஜ், உடைகளுக்குள், மற்றும் காகித அடுக்குகளின் இடையே மறைத்து வைக்கப்பட்ட தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |