£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்!
பிரித்தானியாவின் பிளென்ஹெய்ம் அரண்மனையில் தங்க கழிப்பறை திருடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தங்க கழிப்பறை திருடப்பட்ட சிசிடிவி காட்சி
சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்க கழிப்பறை துணிகரமாக திருடப்பட்ட அதிர்ச்சிகரமான தருணத்தை சமீபத்தில் வெளியான பாதுகாப்பு கேமரா காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
2019 செப்டம்பரில் நடந்த இந்த அசாதாரண கொள்ளையில், சுத்தியல் போன்ற ஆயுதங்களை ஏந்திய கும்பல் ஆக்ஸ்போர்டுஷயர் எஸ்டேட்டிற்குள் புகுந்து கைவரிசையை காட்டியுள்ளனர்.
Here's the ‘The Men with the Golden Bog’ raiding Blenheim Place for the solid gold 'sh*tter that glitters' worth £4.8m https://t.co/tCWTvMixyc pic.twitter.com/3cCcBNMRCk
— CourtNewsUK (@CourtNewsUK) February 25, 2025
இந்த வாரத்தில் ஜூரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான வீடியோவில், அதிகாலை நேரத்தில் இரண்டு வாகனங்கள் அரண்மனை மைதானத்திற்குள் அதிவேகமாக நுழைவதைக் காட்டுகிறது.
அதில் மூன்று நபர்கள் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைவதையும் காணலாம்.
வெறும் ஐந்து நிமிடங்களில், அவர்கள் 4.75 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறையை அரண்மனையிலிருந்து உருட்டி வெளியே கொண்டு வருவதைக் வீடியோவில் பார்க்கலாம்.
18 காரட் தங்க கழிப்பறை
4.75 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை சுமார் 98 கிலோ எடை கொண்டது.
இதனை நீல நிற வோக்ஸ்வாகன் கோல்ஃப் காரின் பின்புறத்தில் ஏற்றுவதையும், அதனால் காரின் சஸ்பென்ஷன் தெளிவாக வளைந்து போவதையும் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
வீடியோவில் கொள்ளையர்களில் ஒருவர் தங்க கழிப்பறையின் இருக்கையை எடுத்துச் செல்வதையும், அது பின்னர் முக்கிய பொருளுடன் காரில் வீசப்படுவதையும் காணலாம்.

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது?
ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியத்தின் படி, சிசிடிவி மூலம் காட்சிகளை கண்காணித்து வந்த அரண்மனை பாதுகாப்பு ஊழியர்கள், கொள்ளையர்களை ஓடிச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர்.
இந்த பரபரப்பான கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |