தங்கப் புதையல் பானை.,திறந்தால் இரத்தம் கக்கி சாவீர்கள்: அம்பலமான உண்மை
தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தங்கப் புதையல் எடுத்துத் தருவதாக கூறி, ரூ.8 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் கைது செய்யப்பட்டது.
தங்கப் புதையல்
ஓசூர் அருகேயுள்ள சாந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதி ராதம்மா - குள்ளப்பா. இவர்கள் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்ற நபர் இவர்களை அணுகியுள்ளார். உங்கள் வீட்டின் அருகில் தங்கப் புதையல் இருக்கிறது எனக் கூறி, குறித்த தம்பதியை லட்சுமிகாந்த் நம்ப வைத்துள்ளார்.
பின்னர் அதனை எடுத்து தருவதாக கூறி சிலரை அவர் அழைத்து வந்துள்ளார். இரவுவேளையில் குழிதோண்டி பானை ஒன்றை அந்த கும்பல் எடுத்துள்ளது. அதில் 2 தங்கக் காசுகள் இருப்பதை ரத்தம்மா, குள்ளப்பாவிடம் காட்டியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இன்னும் ஆழத்தில் பெரிய புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க ரூ.8 லட்சம் வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
அதன்படி பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த கும்பல், மேலும் ஒரு பானையை எடுத்துக் கொடுத்து தினமும் பூசை செய்யுமாறு கூறியுள்ளனர்.
ஆனால், பூசை முடிவதற்குள் பானையை திறந்து பார்த்தால் இரத்த வாந்தி எடுத்து இறந்துபோவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
10 பேர் கைது
அவர்கள் கூறியதை நம்பி குறித்த தினமும் பானைக்கு பூசை செய்து வந்துள்ளது. சில நாட்கள் கழித்து மீண்டும் தொடர்புகொண்ட கும்பல், தங்களுக்கு மேலும் பணம் தேவை என்று ராதம்மாவிடம் கேட்டுள்ளது.
அப்போது சந்தேகமடைந்த ராதம்மாவின் மகன், புதையல் பானையை திறந்துபார்த்தபோது அதில் ஒன்றுமில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே பொலிசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்க, மோசடி கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரை பொலிஸார் தேடி வருகிறனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |