வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பொன் மாலைப் பொழுது; வைரலாகும் வீடியோ
பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளைக் கொண்ட காணொளிகள் நெட்டிசன்களைக் கவரத் தவறுவதேயில்லை.
தற்போது, கேரளாவில் பசுமையான மலைகள் மற்றும் வளைந்த சாலைகளைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் காணொளி
அழகான மலைத்தொடர்களின் இடையில் வளைந்து வளைந்துச் செல்லக் கூடிய பாதைகளும் மாலை நேரச் சூரியனும் பின்னணியில் பிதாமகன் திரைப்படத்தின் “இலங்காத்து வீசுதே” பாடலும் ஒலிப்பதோடு இந்த காணொளி டிவிட்டரில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த காணொளியை சுமார் 65,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
அந்த காணொளியில் உள்ள இடம் எது என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No words to define this beauty ?
— Siddharth Bakaria?? (@SidBakaria) April 20, 2023
Guess the location in Kerala pic.twitter.com/ytnNJZDSYT