ஆந்திராவில் பிரபல்யமான கோங்குரா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
ஆந்திரப் பிரதேசத்தின் தெருக்களில் அதிகளவில் விற்பனையாவது இந்த பிரியாண தான்.
இது மிகவும் பிரபலமான பிரியாணி ரெசிபிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதை எப்படி நீங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
புளிச்ச கீரை விழுது செய்ய
- புளிச்ச கீரை - 1 கட்டு
- பச்சை மிளகாய் - 3 கீறியது
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1/2 தேக்கரண்டி
- தண்ணீர்
பிரியாணி செய்ய
- பாஸ்மதி அரிசி - 500 கிராம்
- சிக்கன் - 1 கிலோ
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- உப்பு - 1 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- நெய் - 2 மேசைக்கரண்டி
- பிரியாணி இலை - 1
- அன்னாசிப்பூ - 1
- ஜாதிபத்திரி பட்டை
- மராத்தி மொக்கு
- சோம்பு - 1 தேக்கரண்டி
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 3
- கல் பாசி
- வெங்காயம் - 3 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தக்காளி - 3 நறுக்கியது
- உப்பு - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை
செய்முறை
1. சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் புளிச்ச கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. பின்பு உப்பு சேர்த்து கலந்துவிடவும், பிறகு நன்கு ஆறவிட்டு விழுதாக அரைக்கவும்.
4. அடுத்து குக்கரில் நெய் மற்றும் எண்ணையை ஊற்றவும்.
5. பின்பு பிரியாணி இலை, அன்னாசிப்பூ, ஜாதிபத்திரி, பட்டை, மராத்தி மொக்கு, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, கல் பாசி சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு மெல்லிசாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
7. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
8. ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
9. பிறகு அரைத்த புளிச்ச கீரையை சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும் .
10. பின்பு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
11. பிறகு விசில் இறங்கியதும் அதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிடவும்.
12. பின்பு கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரை மூடி ஆவி வரும் வரை வேகவிடவும்.
13. ஆவி வந்ததும் விசில் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
14. பின்பு இறக்கி வைத்து 10 நிமிடம் கழித்து திறந்து எடுத்தால் சுவையான பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |