குட் பேட் அக்லி படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி இழப்பீடு கேட்ட இளையராஜா
குட் பேட் அக்லி திரைப்படத்தில் அனுமதி இன்றி தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்காக இளையராஜா இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
குட் பேட் அக்லி தற்போது வரை இரண்டு மில்லியன் டிக்கெட் விற்பனையாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால், சில நாட்களில் ரூ. 200 கோடியை எட்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தில் சுமார் 9 பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்தி இருந்தார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
குறிப்பாக இளையராஜா இசையில் வெளியான, "என் ஜோடி மஞ்ச குருவி", "இளமை இதோ இதோ", "ஒத்த ரூபா தாரேன்" போன்ற பாடல்களும் இடம் பெற்றிருந்தன.
தன்னுடைய அனுமதி இன்றி குட் பேட்லி படத்தில், தன்னுடைய பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி படக்குழுவினருக்கு இளையராஜா ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸில் மூன்று பாடல்களையும், படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஏழு நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லை என்றால் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |