இந்திய அணியில் மீண்டும் டோனி! சரியான முடிவு என பாராட்டி தள்ளிய நண்பர் சுரேஷ் ரெய்னா
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது.
இதற்கான அணி குறித்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் அறிவித்த நிலையில், நேற்று இந்தியா அறிவித்தது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், நான்கு ஆண்டுகளுக்கு பின், ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போன்று அணியின் ஆலோசகராக டோனி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உலகக்கோப்பை தொடரில் விளையாடப்போகும் இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள், அணியின் தேர்வு மிகவும் நன்றாக பேலன்சாக உள்ளது.
All the very best to #TeamIndia on the upcoming T20 World Cup, the selected squad looks very balanced. Good to have @ashwinravi99 back in the team, and a fabulous decision by @bcci to have the man himself @msdhoni bhai as the mentor.
— Suresh Raina?? (@ImRaina) September 8, 2021
அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்புவதை பார்க்கும் போது நன்றாக உள்ளது, அதே போன்று அணியின் ஆலோசகராக டோனியை பிசிசிஐ நியமித்திருப்பது சரியான முடிவு என்று பாராட்டியுள்ளது.