சிறுநீரக ஆரோக்கியம் காக்கும் வாழைத்தண்டு சாம்பார்
வாழைத்தண்டில் நார்சத்து அதிகளவில் உள்ளது.இது வயிற்று புண்கள் மற்றும் வயிற்றில் அமிலத்திற்கு சிகச்சையளிக்க பயன்படுகிறது.
வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது.
இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது.
வாழைத்தண்டு சிறுநீர்ப்பாதை மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க மிகச்சிறந்த இயற்கை உணவு.
வாழைத்தண்டில் வைட்டமின் பி 6, பொட்டாசியம் மற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளது.இதை அவ்வப்போது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
சிறுநீரக கற்களால வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறகூடும்.
தேவையான பொருள்
- வாழைத்தண்டு – 2 கப் (சுத்தம் செய்து, நறுக்கியது)
- புளி – 1 எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- துவரம் பருப்பு – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
சாம்பார் மசாலா அரைக்க
- வர கொத்தமல்லி – 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- மிளகு – கால் ஸ்பூன்
- தேங்காய் – அரை கப் (துருவியது)
- வெந்தயம் – கால் ஸ்பூன்
- சீரகம் – கால் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- கறிவேப்பிலை – 1
- கொத்து பெருங்காயம் – ஒரு சிட்டிகை
செய்முறை
வாழைத்தண்டுகளை சுத்தமாக கழுவி நார்களை அகற்றி பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய வாழைத்தண்டுகளை குக்கரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதை குக்கரில் இருந்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து வைத்துகொள்ள வேண்டும்.
பின் குக்கரில் துவரம் பருப்பு சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
பருப்பு நன்கு வெந்தவுடன் அதில் வாழைத்தண்டு சேர்த்து கொதிக்கவிட்டு பின் அதில் புளித்தண்ணீர் சேர்க்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை அரைத்தும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது நீங்கள் வழக்கமாக வாங்க பயன்படுத்தும் மசாலாக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பின் கொதிக்கும் கலவையில் மாசாக்களை சேர்த்து பின் ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைத்தண்டு சாம்பார் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |