சுவிஸ் குடியுரிமை பெறுவது தொடர்பில் ஒரு பயனுள்ள செய்தி
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு பல நிபந்தனைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
பொதுவாகவே குடியுரிமை பெறுவது குறித்து எழும் கேள்விகளில் ஒன்று வருவாய் குறித்ததாக இருக்கும்.
ஆக, ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற அவர் அதிக ஊதியம் பெறும் பணியிலிருப்பது அவசியமா?
சுவிஸ் குடியுரிமை பெற அதிக ஊதியம் பெறுவது அவசியமா?
ஸ்வீடன், ஜேர்மனி போன்ற சில நாடுகளில் பணி அனுமதி மற்றும் குடியுரிமை பெற குறைந்தபட்சம் இவ்வளவு ஊதியம் பெறவேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், சுவிட்சர்லாந்தில் ஒருவர் குடியுரிமை பெற இவ்வளவு வருவாய் உடையவராக இருக்கவேண்டும் என்று கூறும் விதிகள் இல்லை.
அதே நேரத்தில், சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர் தனது தேவைகளை சந்திக்கும் வகையில் போதுமான வருவாய் உடையவராக இருக்கவேண்டும் என்றொரு சட்டம் உள்ளது.
அதாவது, அவர் அரசின் நிதி உதவியை பெறும் நிலையில் இல்லாமல், தன் தேவைகளை தானே சந்தித்துக்கொள்ளும் அளவுக்கு வசதி உடையவராக இருக்கவேண்டும்.
இந்த விதி, மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. சுவிட்சர்லாந்தில் ஓய்வு காலத்தை செலவிட விரும்புபவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |