கொரோனா பாதித்த இலங்கை நட்சத்திர வீரரின் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கை ஆல்-ரவுண்டர் சமிக்க கருணாரத்ன உடல்நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 11ம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
அவுஸ்திரேலியா செல்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது சாமிக்க கருணாரத்னவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவர் இலங்கையிலே தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், தனிமைப்படுத்தலில் உள்ள சாமிக்க முழுமையாக தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது.
எனவே, செவ்வாய்க்கிழமை( பிப்ரவரி 8) அதிகாலை சாமிக்க அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இலங்கை அணியில், சாமிக்க இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் டில்ஷான் பொன்சேகாவுக்கும் தொற்று பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளதாம்.
டில்ஷான் பொன்சேகாவும் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவுஸ்திரேலியா புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.