இளவரசி கேட் தொடர்பில் மீண்டும் ஒரு நல்ல செய்தி
இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தற்போதைய நிலை என்ன, அவர் எப்போது மீண்டும் பொதுவாழ்க்கைக்குத் திரும்புவார் என்பது போன்ற விடயங்களை அறிய, அவரது ரசிகர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்திய செய்தி ஒன்று அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Credit: The Mega Agency
இளவரசி கேட் தொடர்பில் மீண்டும் ஒரு நல்ல செய்தி
உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய இளவரசி கேட், மார்ச் மாதத்தின் மத்தியப்பகுதியில் தன் கணவருடன் பண்ணைக்கடை ஒன்றிற்கு சென்று திரும்பும் காட்சிகள் வெளியாகின. அதற்குப் பின் அவர் பொது இடங்களில் தோன்றியதாக எந்த செய்தியும் இல்லை.

Credit: AP
இந்நிலையில், இளவரசி கேட், தன் கணவரான இளவரசர் வில்லியம், தன் பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸுடன் வெளியே சென்று திரும்பியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி, இளவரசி கேட் சரியான பாதையில் ’positive’ அடி எடுத்துவைக்கிறார் என்பதையே காட்டுவதாக தெரிவிக்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளரான Richard Fitzwilliams.

Credit: Newspix
இளவரசி கேட் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு நீண்ட காலம் ஆகாது என்றே அனைவரும் நம்பும் இந்த நேரத்தில், அவர் வெளியில் காணப்பட்டதாக கூறும் இந்த செய்தி ஒரு நல்ல முன்னேற்றத்தையே காட்டுகிறது என்று கூறியுள்ளார் Richard.

Credit: BBC Studios
அவருக்கு வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, அவர் புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். ஆகவே, உடனடியாக அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்று கூறிவிட முடியாது. என்றாலும், அவர் வெளியில் நடமாடுவதை குறித்து வெளியாகியுள்ள செய்தி, எல்லாம் நன்றாகவே நடந்துவருகிறது என்பதற்கு ஒரு அடையாளம் என்கிறார் Richard.

Credit: TWITTER/PRINCE&PRINCESSOFWALES
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |