பிரித்தானியா செல்லும் கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
வரும் திங்கட்கிழமை முதல், கனடாவிலிருந்து பிரித்தானியா செல்வோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் (ஆகத்து 30), பிரித்தானியா செல்லும் கனேடியர்கள், அவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, பிரித்தானியாவுக்குள் நுழைந்ததும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.
பிரித்தானிய போக்குவரத்துத்துறை, கனடாவிலிருந்து வருபவர்களால் தங்கள் நாட்டுக்கு பெருமளவில் அபாயம் இல்லை என்பதால், கனடா தங்கள் பச்சை நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஆனாலும், கனடாவிலிருந்து வருவோர் பிரித்தானியா புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னும், பிரித்தானியா வந்தடைந்த இரண்டு நாட்களுக்குப் பின்னும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Ottawaவிலுள்ள பிரித்தானிய உயர் ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.