பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி...
பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.
வெளிநாட்டவர்கள் பணி செய்ய தடையாக இருந்த விடயம்
அதாவது, வெளிநாட்டவர்களான பல் மருத்துவர்கள் பிரித்தானியாவில் மருத்துவர்களாக பணியாற்றவேண்டுமானால், அதற்காக அவர்கள் ஒரு தேர்வு எழுதி வெற்றிபெறவேண்டும்.
தற்போது, பிரித்தானியாவில் பல் மருத்துவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. பல் மருத்துவரிடன் அப்பாயின்ட்மென்டுக்காக காத்திருந்து, சலித்துப்போய் சிலர் தாங்களாகவே தங்கள் பற்களைப் பிடுங்கிக்கொண்டதைக் குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.
CREDIT: ANDY RAIN/EPA-EFE/SHUTTERSTOCK
ரத்து செய்யப்படும் தேர்வு
இந்நிலையில், பிரித்தானியாவில் பல் மருத்துவர்கள் பணி புரிவதற்கு தகுதி பெறுவதற்கான தேர்வை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது.
இதனால், தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்கள் பலர் பிரித்தானிய மருத்துவமனைகளில் பணி செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
நல்ல ஊதியம், சில குறிப்பிட்ட இடங்களில் பணி புரிவோருக்கு போனஸ் என பல வசதிகள் பல் மருத்துவர்களுக்கு செய்துகொடுக்கப்பட உள்ளன. தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |