பிரித்தானியர்களுக்கு நிதி அமைச்சகம் அறிவித்துள்ள நற்செய்தி! வேலை-பாதுகாப்பு ஃபர்லோ திட்டம் நீட்டிப்பு
பிரித்தானியா அதன் மிகப்பெரிய வேலை-பாதுகாப்பு ஃபர்லோ திட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கவுள்ளதாக நிதி அமைச்சகம் அதன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை, நிதியமைச்சர் ரிஷி சுனக் பட்ஜெட் உரையில் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்க உள்ளார்.
மேலும் செப்டம்பர் இறுதி வரை, சுயதொழில் செய்பவர்களுக்கான ஆதரவை விரிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபர்லஃப் திட்டத்தின் ( job-protecting furlough programme) கீழ் வரும் தொழிலாளர்கள், வேலை செய்யாமேலே அவர்களின் 80% சம்பளத்தை தொடர்ந்து பெறுவார்கள். தற்போதைய நிலவரப்படி, ஐந்தில் ஒரு தனியார் துறை ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் 600,000 சுயதொழில் தொழிலாளர்கள் அரசாங்க உதவிக்கு தகுதி பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 வரி ஆண்டில் சுயதொழில் புரிந்த தொழிலாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்களை அரசாங்கம் இதுவரை அனுமதித்திருந்தது, ஆனால் இப்போது 2019- 20ஆம் ஆண்டில் சுயதொழில் செய்வதாக முதலில் அறிவித்தவர்களுக்கும் Self-Employment Income Support Scheme-ன் கீழ் உதவி வழங்கப்படவுள்ளது.