கனடாவில் பணி செய்ய காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ள புலம்பெயர்தல் அமைச்சர்
கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
18 மாதங்களுக்குப் பிறகு கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம், நேற்று மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பருக்குப் பின், முதன்முறையாக வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களை கனடா வரவேற்றுள்ளது.
இன்று (6.7.2022), மீண்டும் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் மீண்டும் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ள கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, இனி விண்ணப்பங்கள் ஆறு மாத பரிசீலிப்பு காலகட்டத்தில் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றார். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதுவரை பொறுமை காத்ததற்காக நன்றி என்று கூறிய அவர், கனடாவின் தொழிலாளர் பற்றாக்குறையை சந்திப்பதற்கு அத்தியவாசியமானவர்களான திறன்மிகுப் பணியாளர்களை வரவேற்க காத்திருக்கிறேன் என்றார்.
ஜூலை 6 முதல், தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்,
- பெடரல் திறன்மிகுப் பணியாளர் திட்டம்
- பெடரல் திறன்மிகு வர்த்தக திட்டம்
- கனேடிய எக்ஸ்பிரஸ் வகுப்பு ஆகிய திட்டங்களின் கீழ் நிரந்தர வாழிடம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser.