இன்னும் சில வாரங்களில்... தடுப்பூசி பெற்ற பிரித்தானியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
முழுமையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிரித்தானியர்கள் இன்னும் சில வாரங்களில் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியும் பெற்றுக்கொண்ட பிரித்தானியர்கள், அடுத்த மாதத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளவோ, தினமும் பரிசோதனை செய்துகொள்ளவோ அவசியமின்றி சகஜ வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் திட்டங்களை அறிமுகம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், இதைப் பயன்படுத்திக்கொண்டு, தடுப்பூசி பெறாதவர்களும் ஏமாற்றும் ஒரு அபாயம் உள்ளது என்ற அச்சமும் நிலவுவதை மறுப்பதற்கில்லை.
திங்களன்று நடைபெற உள்ள கூட்டம் ஒன்றில், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரின் தொடர்பு வட்டத்துக்குள் இருந்தாலும்கூட, அவர்கள் இனி தினமும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அவசியமில்லை என்ற திட்டத்தை அனுமதிப்பதற்காக அமைச்சர்கள் கையெழுத்திட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Exeter பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறை நிபுணராக இருக்கும் Dr Bharat Pankhania என்பவரும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியும் பெற்றுக்கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் விதிகளிலிருந்து விலக்களிப்பது முற்றிலும் சரியானதே என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.