சுற்றுலா விசாவில் அமெரிக்கா செல்பவர்களுக்கு வந்தது ஒரு நல்ல செய்தி!
பல நாடுகள் தற்போது பல விசா விண்ணப்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவும் ஒரு விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய விசா முறை
இதில் சுற்றுலா விசாவில் செல்பவர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.
பொதுவாகவே சுற்றுலா விசாவில் செல்பவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. குறிப்பிட்ட காலத்திற்கு தான் அங்கு தங்கி வசிக்க முடியும். ஆனால் தற்போது வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
புதிய வேலை வாய்ப்பை தொடங்கும் முன்பு B1 மற்றும் B2 விசாவை வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றுவதற்கான மனு மற்றும் கோரிக்கை அளித்து அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் வேலை வாய்ப்பை பெற்ற ஒருவர் விசா முடிவந்தவுடன் அமெரிக்காவை விட்டு வெளியேறி தனது சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் தான் மீண்டும் வேலை வாய்ப்பிற்கு அனுமதி விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.