இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா?
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா என்பது தொடர்பில் பலரும் பலவித கருத்துக்களைக் கூறிவருகிறார்கள்.
சிலர் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தண்ணீர் குடிக்கவேண்டும் என்கிறார்கள், சிலர் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தண்ணீர் குடிப்பது குறித்து வித்தியாசமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா?
நிபுணர் விளக்கம்
விடயம் என்னவென்றால், இந்த விடயம் குறித்து விளக்குபவர்கள், தாங்கள் எந்த துறை சார்ந்தவர்களோ, அதற்கு ஏற்றவகையில் தங்கள் விளக்கத்தை அளிக்கிறார்கள்.
அவ்வகையில், sleep expert என்னும் தூக்கம் சார்ந்த துறை நிபுணரான Ashley Hainsworth என்பவர், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா என்பது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல என்கிறார். அதாவது, இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் தண்ணீர் குடிப்பது, தூக்கத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் என்கிறார் Ashley.
அடிக்கடி எழுந்திருக்கவேண்டி வரலாம்
பகலில் நமது உடலுடைய தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பது அவசியாமான ஒன்று என்று கூறும் Ashley, அதே நேரத்தில், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, கவனிக்கவும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால், உங்கள் சிறுநீரகங்கள் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யும், அதனால், நீங்கள் அடிக்கடி கழிவறைக்குச் செல்ல நேரிடும். அதனால் உங்கள் தூக்கத்துக்கு இடையூறு ஏற்படும் என்கிறார்.
தூக்கம் கெடுவதால், உங்கள் நீண்ட கால உடல் நலனில் பாதிப்பு ஏற்படும் என்கிறார் அவர். அதாவது, ஒருவருக்கு இடையூறு இல்லாத, ஆழ்ந்த தூக்கம் அவசியம். அது உங்கள் உடல் மற்றும் மன நலனை சரியான நிலையில் வைக்க அவசியம் என்று கூறும் Ashley, இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் அதிகமாக தண்ணீர் குடித்துவிட்டு, இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க செல்வதால் தூக்கம் கெடுவதுடன், அது நம் உடலின் மொத்த ஆரோக்கியத்துக்கும் கேடு என்கிறார்.
ஆக, தண்ணீர் குடிப்பது அவசியம், எனவே காலையில் தண்ணீர் குடிக்கத் துவங்குங்கள், பகல் முழுவதும், தேவைக்கேற்ப தண்ணீர் குடியுங்கள், அப்படிச் செய்யும்போது, இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவேண்டிய தேவையும் ஏற்படாது என்கிறார் Ashley.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |