2024ம் ஆண்டில் அம்பானி குடும்பத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் யார் தெரியுமா? வெளியான கூகுள் தேடல் அறிக்கை
இந்தியாவின் கூகுள் 2024-ஆம் ஆண்டு தேடலில் ராதிகா மெர்சண்ட் மற்றும் வினேஷ் போகாத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கூகுளின் 2024-ஆம் ஆண்டு தேடல் அறிக்கை
2024 ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்தியாவின் 2024 ம் ஆண்டுக்கான கூகுள் தேடல் அறிக்கை வெளிவந்துள்ளது.
விளையாட்டு சாதனைகளிலிருந்து அரசியல் மாற்றங்கள் வரை, இந்த அறிக்கை மக்களின் கற்பனையை ஈர்த்த நபர்களையும் நிகழ்வுகளையும் வெளிப்படுத்துகிறது.
அம்பானி வீட்டு மருமகள்
2024ம் ஆண்டில் மிகவும் தேடப்பட்ட நபர்களில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் இடம்பெற்றுள்ளார்.
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானியுடனான திருமணம், ராதிகா மெர்ச்சன்ட்-யை மாதக்கணக்கில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற செய்தது.
அத்துடன் கூகுளின் 2024-ஆம் ஆண்டு தேடல் அறிக்கையிலும் முதன்மையான இடங்களுக்குள் இடம்பெற செய்துள்ளது.
ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் அலங்கரித்த முந்தைய திருமண விழாக்கள் நாடு முழுவதும் வைரலாக பரவி, ராதிகாவின் இடத்தை உறுதி செய்துள்ளது.
இந்திய வீராங்கனை வினேஷ் போகாத்
பாரிஸ் ஒலிம்பிக்கில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அரையிறுதி பெற்ற பிரம்மாண்ட வெற்றி இந்திய வீராங்கனை வினேஷ் போகாத்-ஐ உலக மேடையில் தலைநிமிர்த்தியது.
பின்னர் நடந்த விவாதத்திற்குரிய தகுதி நீக்கத்தால் அவரது ஒலிம்பிக் கனவை சிதைத்தது, இருப்பினும் போகாத்தின் நிலையான தைரியமும் முன்னோடி செயல்திறனும் அவரை தேசிய அடையாளமாக உயர்த்தியது.
அத்துடன் இந்திய வீராங்கனை வினேஷ் போகாத்-ஐ கூகிளின் 2024-ஆம் ஆண்டு தேடல் அறிக்கையில் முதலிடம் பெற வைத்துள்ளது.
இரண்டாவது இடத்தை மூத்த அரசியல்வாதியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிடித்துள்ளார்.
இவரை தொடர்ந்து நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் தன்னுடைய தேர்தல் வெற்றி மூலமும் கவர்ந்திழுக்கும் பிரச்சாரம் மூலமும் இந்த கூகிள் ஆண்டு தேடல் அறிக்கை 2024-லில் இடம் பெற வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |