95 கோடியை தாண்டிய Gemini AI பயன்பாட்டாளர்கள்: கூகுள் CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(AI) பிரிவின் தலைமை பொறுப்புகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூகுள் தலைமையில் அதிரடி மாற்றம்
செயற்கை நுண்ணறிவு பிரிவில் கூகுள் நிறுவனம் முதன்மையான தொடர்ந்து திகழ வேண்டும் என்று கூகுள் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவுபடுத்தி வருகிறது.
அதே நேரம் கூகுள் நிறுவனத்தின் உயர் பதவிகளிலும், பொறுப்புகளிலும் பெரும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தங்களுடைய ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

ஊழியர்களின் விலகல், புதிய பொறுப்புகள்
கூகுள் நிறுவனத்தின் 30 வது ஊழியராக இணைந்து கிட்டத்தட்ட கடந்த 27 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தின் தேடுபொறி, கூகுள் மேப்ஸ், மற்றும் கூகுள் பிரைன் ஆகிய முக்கிய கட்டமைப்புகளை வழிநடத்திய ஜெஃப் டீன் கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான சஞ்சய் கெமாவாத் உடன் இணைந்து ஜெஃப் டீன் புதிய தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளார்.
இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான டெமிஸ் ஹசாபிஸ், கூகுளின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளராகவும், DeepMind அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல கூகுள் நிறுவனத்தின் DeepMind பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான கொரே கவுக்சியோக்லு நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடென்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் Gemini AI, ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் அன்றாட செயற்பாடுகளை நேரடியாக தலைமையேற்று வழி நடத்துகிறார்.
கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான Gemini AI பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 95 கோடியை தாண்டியுள்ளது.
அதே போல திறந்த மூலக் குறியீடு கொண்ட Gamma மாடல்கள் இதுவரை 90 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |