Google, Apple இடையே ரகசிய ஒப்பந்தம்! அமெரிக்காவில் இரு நிறுவனங்கள் மீது வழக்கு
Google மற்றும் Apple நிறுவனங்கள் தேடுதல் (Search) வணிகத்தில் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்காவில் வழக்கு தொடரபட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், Apple நிறுவனம் தேடல் வணிகத்தில் ஈடுபடாது மற்றும் அதன் சாதனங்களில் Google-ன் தேடுபொறி முதலிடம் வகிக்கும் என்பதை உறுதிப்படுத்த இரு நிறுவனங்களும் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், Google உடன் போட்டியாக தேடல் வணிகத்தில் போட்டியிடுவதில்லை என்ற Apple-ன் உறுதிப்பாட்டிற்கு ஈடாக, Google தேடல் வணிகத்தின் லாபத்தை Apple உடன் பகிர்ந்து கொள்ளவும், மேலும் Apple-க்கு கூடுதலாக பில்லியன் டொலர்களை செலுத்தவும் ஒப்புக்கொண்டதாக, இந்த வழக்கு குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், இந்த class-action வழக்கு எத்தனை பில்லியன் என்கிற சரியான தொகையை குறிப்பிடவில்லை.
Apple-ன் சாதனங்கள், Yahoo! DuckDuckGo மற்றும் Bing போன்ற மற்ற தேடுபொறி வழங்குநர்களை விட Google-க்கு கணிசமான மற்றும் நியாயமற்ற போட்டி எதிர்ப்பு நன்மையை வழங்குகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனர் தரவைக் கண்காணிக்கும் cookies பயன்படுத்தியதற்காக வியாழக்கிழமை பிரெஞ்சு கட்டுப்பாட்டாளர்கள் Google மற்றும் Facebook மீது 237 மில்லியன் டொலர் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு எழுந்துள்ளது.
Google-ல் விருப்பம் இல்லாத விளம்பரதாரர்கள் உட்பட பிற தேடல் வழங்குநர்களை 'அடக்க' Apple மற்றும் Google நிறுவங்கள் இந்த ஒப்புதலை மேற்கொண்டதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக இரு நிறுவங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் இடையே தனிப்பட்ட சந்திப்புகளில் அவ்வப்போது ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் "சட்டவிரோதமானது" மற்றும் நாட்டின் நம்பிக்கைக்கு எதிரான சட்டங்களுக்கு எதிரானது என்று வழங்க்கில் கூறப்பட்டுள்ளது.