22,000 கோடி கொடுத்து முன்னாள் ஊழியரை சேர்த்த கூகுள்! யார் அவர்?
கூகுள் நிறுவனம் AI உலகில் பிரபலமான நோம் ஷஜீரை 2.7 பில்லியன் டொலர்கள் கொடுத்து மீண்டும் பணியமர்த்தியுள்ளது.
2.7 பில்லியன் டொலர்கள்
2021ஆம் ஆண்டில் கூகுளில் இருந்து நோம் ஷஜீர் (Noam Shazeer) தனது சக ஊழியர் டேனியல் டி ஃப்ரக்டோஸுடன் வெளியேறினார். இதற்கு காரணம் அவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய Chatbotஐ வெளியிட கூகுள் நிறுவனம் மறுத்ததுதான்.
பின்னர் Character.AI எனும் நிறுவனத்தை ஷஜீர், டேனியல் இருவரும் சேர்ந்து தொடங்கினர். அந்நிறுவனம் வேகமாக வளர்ந்து கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டொலர் மதிப்பை அடைந்தது.
மேலும் சிலிக்கான் வாலேயில் மிகப்பிரபலமான மற்றும் மிகச்சிறந்த AI ஸ்டார்ட்அப் ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனத்தில் மீண்டும் பணிபுரிய நோம் ஷஜீருக்கு 2.7 பில்லியன் டொலர்கள் (22,000 கோடி) வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
$4.4 பில்லியன் சொத்து மதிப்பு…இந்திய பில்லினருக்கு நேர்ந்த அவமதிப்பு: ரோல்ஸ்-ராய்ஸ் ஷோரூமில் நடந்த கதை
கூகுளின் AI யூனிட்டான DeepMindயில் நோம் மற்றும் டேனியல் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Character.AI நிறுவனத்தை வாங்கிய கூகுள், அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள உரிமம் கோரியுள்ளது.
நோம் ஷஜீர்
2000ஆம் ஆண்டு கூகுளில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்த நோம் ஷஜீர், தனது திறமையால் முந்தைய கூகுள் CEO எரிக் ஸ்ச்மிட்டை கவர்ந்தார்.
நோம் ஷஜீர் தற்போது கூகுளின் ஜென் AI ஆன ஜெமினியின் அடுத்த Versionஐ மேம்படுத்தும் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இது OpenAIயின் ChatGPTக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், மீண்டும் நோமை பணியில் சேர்க்கவே Character.AI நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளதாக சக ஊழியர்கள் கூறுகிறார்களாம். அதிக ஊதியத்திற்கு நோம் மீண்டும் கூகுளில் இணைந்ததுதான் தற்போது டெக் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |