சுந்தர் பிச்சை கொடுத்த அதிர்ச்சி! தீயாய் பரவும் தகவல்
கூகுள் ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு எனும் AIயின் தாக்கத்தினால் பல துறைகளில் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற கூற்று பரவலாக நிலவுகிறது.
இந்த சூழலில், AIயின் ஆதிக்கத்தால் கூகுள் நிறுவனத்திலும் 10 சதவீதம் பேரின் வேலை பறிபோவதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு சுமார் 12,000 பேரை கூகுள் நீக்கியதுதான்.
தற்போது வெளியாகியுள்ளது தகவலின்படி, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிர்வாக ரீதியான ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
நிறுவன செயல்பாடு, செயல்திறனை மேம்படுத்த மற்றும் AIயின் ஆதிக்கத்தால் தகவல் தொழில்நுட்ப துறையின் சவால்களை சமாளிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |