Google CEO சுந்தர் பிச்சையின் 332 கோடி சொகுசு பங்களா: சொர்க்கத்தை பார்க்கனுமா இதோ
பிரபல கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை தன்னுடைய மனைவி அஞ்சலி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சுமார் 332 கோடி கலிபோர்னியன் சொகுசு பங்களா வசித்து வருகிறார்.
சுந்தர் பிச்சை
Alphabet மற்றும் அதன் துணை நிறுவனமான Google ஆகியவற்றின் CEO-வான தமிழர் சுந்தர் பிச்சை மில்லியன் கணக்கான மக்களுக்கு உந்துதல் மற்றும் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்து முன்னணி பொறியியல் கல்லூரியான IIT யில் படித்த சுந்தர் பிச்சை தற்போது கலிபோர்னியாவின் லாஸ் ஆல்டோஸ் ஹில்(Los Altos Hill) பகுதியில் வசித்து வருகிறார்.
கலிபோர்னியாவின் லாஸ் ஆல்டோஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள சுந்தர் பிச்சையின் சொகுசு பங்களாவானது அனைத்து வசதிகளுடன் சொர்க்கத்தை விட குறைவில்லாமல் உள்ளது.
சுமார் மலையின் உச்சியில் 31.17 ஏக்கர் நிலப்பரப்பில் கண்களை மயக்கும் காட்சிகளுடன் இந்த சொகுசு பங்களாவானது கட்டப்பட்டுள்ளது.
வசதிகள்
இந்த பங்களாவை சுந்தர் பிச்சை சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதாவது 332 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இதன் உள்ளீட்டு அலங்காரத்திற்கு மட்டும் சுமார் ரூ. 49 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி மேற்பார்வையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சொர்கத்தை காட்டிலும் ஆடம்பரமான இந்த சொகுசு பங்களாவில் முடிவே இல்லாத நீச்சல் குளம்(infinity pool), உடற்பயிற்சி கூடம்(gym), ஸ்பா(spa) மற்றும் மதுபான அறை(wine cellar) ஆகியவை வெகு விமர்சையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சொகுசு பங்களா சோலார் பேனல்கள், லிஃப்ட் மற்றும் குழந்தை பராமரிப்பாளர்களுக்கான தனியறை ஆகியவை உள்ளது. IITயில் சுந்தர் பிச்சை மற்றும் அவரது மனைவி அஞ்சலியை ஒன்றாக பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Alphabet, Google, CEO, Sundar Pichai, IIT, top engineering college, Los Altos Hills, California, luxurious facilities, USD 40 million, Rs 332 crore, Pichai's wife Anjali, Anjali, businessman, money