கூகுள் தமிழன் சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்த சென்னை வீடு விற்பனை! வாங்கியது யார்?
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் பிறந்து வளர்ந்த சென்னையில் உள்ள தனது குடும்ப வீட்டை தமிழ்த் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான சி.மணிகண்டனுக்கு விற்றார்.
சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை வாங்கிய தமிழ் சினிமா பிரபலம்
தமிழ் சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான சி மணிகண்டன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை வாங்கியுள்ளார். சென்னையின் குடியிருப்பு பகுதியான அசோக் நகரில் அமைந்துள்ள இந்த வீடு மணிகண்டனின் முதல் சொத்து என கூறப்படுகிறது.
மணிகண்டன் வாங்குவதற்காக ஒரு நிலத்தையோ வீட்டையோ தேடிக்கொண்டிருந்ததாகவும், சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்த வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது என்பதை அறிந்த அவர் உடனடியாக அதனை வாங்க செல்ல முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
Sundar Pichai PhotoDavid Paul Morris/Bloomberg
'தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர்'
தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர் சுந்தர் பிச்சை, அவர் வாழ்ந்த வீட்டை வாங்குவது தன் வாழ்வின் பெருமைக்குரிய சாதனை என்று மணிகண்டன் கூறியுள்ளார்.
பழைய வீடு என்பதால் அந்த வீட்டை இடித்துவிட்டு, நிலமாகவே தனக்கு விற்றதாகவும், கோயில் போன்ற இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விட மனமில்லை, அதனால் தனது மனைவி குழந்தைகளுடன் குடும்பமாக வாழு ஒரு வில்லாவை அங்கு ஆசையாக கட்டவுள்ளதாகவும் மணிகண்டன் கூறியுள்ளார்.
ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளரான மணிகண்டன் சுமார் 300 வீடுகளை கட்டி கொடுத்துள்ளதாக கூறுகிறார்.
Credit: KalakkalCinema
பணிவு மற்றும் அடக்கமான அணுகுமுறை
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பெற்றோரின் பணிவு மற்றும் அடக்கமான அணுகுமுறை தன்னை பிரமிக்கவைத்ததாகவும் மணிகண்டன் கூறினார்.
சுந்தர் பிச்சையின் தாய்-தந்தையரை சென்னை அடையாரில் நேரில் சந்தித்து சொத்து வாங்குவது குறித்து பேசியதாகவும், அவர்கள் மிகவும் இயல்பாக பேசி நடந்துகொண்டதாகவும், அவர்கள் ஒரு அருமையாக காபி போட்டு கொடுத்ததாகவும், முதல் சந்திப்பிலேயே, தன்னைப் பற்றி விசாரித்து, அவர்களுக்கு தன்னை மிகவும் பிடித்ததாக கூறியதாகவும், நல்ல நேரம் பார்த்து தனக்கு வீட்டின் ஆவணங்களை கொடுத்ததாகவும் கூறினார். அவர்களின் பணிவு மற்றும் நான் மயக்கமடைந்தேன்," என்று அவர் மேற்கோள் காட்டினார்.
Photo Credit: BIJOY GHOSH
சுந்தர் பிச்சையின் தந்தை பதிவு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்ததாகவும், தனது மகனின் பெயரையும் அந்தஸ்தையும் பயன்படுத்தவில்லை என்றும், ஆவணங்களை தன்னிடம் ஒப்படைப்பதற்கு முன்பு தேவையான அனைத்து வரிகளையும் செலுத்தியதாகவும் மணிகண்டன் கூறினார்.
கலங்கிய சுந்தர் பிச்சையின் தந்தை
சுந்தர் பிச்சை தந்தையின் முதல் சொத்து இது என்பதால் ஆவணங்களை ஒப்படைக்கும் போது அவர் சில நிமிடங்கள் உடைந்துவிட்டார் என்றும் மணிகண்டன் மேலும் கூறினார்.
சுந்தர் பிச்சை சென்னையில் வளர்ந்தார், ஆனால் அவர் 1989-ல் ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியல் படிக்க சென்றார். அவர் 20 வயது வரை இந்த வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.