Google Chrome பயன்படுத்துபவரா? உங்கள் டிவைஸ் ஹேக் செய்யப்படலாம் உஷார்
கூகுள் நிறுவனம் Google Chrome பிரவுசரில் புதிய பக் (bug) ஒன்றை கண்டறிந்துள்ளது. எனவே குரோம் யூஸர்கள் உடனடியாக Chrome-ன் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கை அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ள CERT-In, Google Chrome-ல் ஒரு பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்த bug ( CVE- 2022-1096) டார்கெட் செய்யப்படும் டிவைஸில் arbitrary code எனப்படும் தன்னிச்சையான குறியீட்டை இயக்க அனுமதிக்கும். இதனால் குறிப்பிட்ட டிவைஸ் ஹேக் செய்யப்படும் அபாயம் மிக அதிகம்.
உங்கள் Chrome பிரவுசரை எவ்வாறு அப்டேட் செய்வது?
கூகுள் குரோமை அப்டேட் செய்ய முதலில் உங்கள் சிஸ்டம் அல்லது டிவைஸில் குரோம் பிரவுசரை ஓபன் செய்யவும். இது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸில் கிடைக்கிறது.
பிரவுசர் பேஜின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று டாட்களை டேப் செய்யவும்.
பின்னர் செட்டிங்ஸை கிளிக் செய்யவும்.
இதனை தொடர்ந்து, ''About Chrome' என்பதை டேப் செய்யவும். நீங்கள் எந்த வெர்ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.