Chrome பயனர்களுக்கு Google எச்சரிக்கை! உடனடியாக இதை செய்யுங்கள்..
குரோம் பிரௌசரை உடனடியாக அப்டேட் செய்யுமாறு அதன் பில்லியன் கணணக்கான அதன் பயனர்களை கூகுள் இப்போது எச்சரிக்கிறது.
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் Google-ன் Chrome பிரௌசர் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரமாக இருந்த சில பிரச்சினைகளை அந்நிறுவனம் தற்போது சீரமைத்துள்ளது.
இந்த நிலையில், Browsing செய்யவும், மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கவும், டிவி பார்க்கவும் நீங்கள் Chrome செயலியைப் பயன்படுத்தினால், உங்கள் மென்பொருள் முழுமையாகப் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது மிகவும் நல்லது.
ஏனெனில், இந்த பிரபலமான உலாவியில் (Browser) மொத்தம் 30 (Bugs) பிரச்சனைகளை சரி செய்யும் முக்கியமான புதுப்பிப்பை வெளியிடுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
சில பிரச்சினைகள் மிகவும் தீவிரமானவை, அவை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தால் "உயர்" தீவிரத்தன்மை மதிப்பீட்டை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த bugs-ஐ ஹேக்கர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
Windows, Mac, Linux என அனைத்து முக்கிய தளங்களிலும் Google Chrome மீண்டும் வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்டதையடுத்து இந்த புதுப்பிப்புகள் வந்துள்ளன.