Pixel 6 சீரிஸ் போன்களில் அந்த வசதி இல்லை! உண்மையை உடைத்த Google
Google நிறுவனம் தனது Pixel 6 சீரிஸ் மாடல்களின் ஓயர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
Google நிறுவனத்தின் Pixel 6 சீரிஸ் மாடல்களில் அதிகளவு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால், தற்போது கூகுள், தனது புதிய பிளாக்ஷிப் Pixel 6 சீரிஸ் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து Google நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
Google Pixel 6 சீரிஸ் மாடல்களுடன் சார்ஜர் வழங்கப்படுவதில்லை. எனினும், கூகுள் 30 வாட் பாஸ்ட் சார்ஜரை தனியாக விற்பனை செய்து வருகிறது.
இதையடுத்து பலரும் புதிய Pixel 6 சீரிஸ் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.
தற்போது கூகுள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, புதிய Pixel 6 மாடலில் 21 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், Pixel 6 Pro மாடலில் 23 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
பேட்டரி செல், சிஸ்டம் டிசைன், டெம்பரேச்சர், சிஸ்டம் யூசேஜ் மற்றும் ஸ்டேட் ஆப் சார்ஜ் உள்ளிட்ட காரணிகளே சார்ஜிங் ரேட்டை நிர்ணயிக்கிறது.
எனினும், போனின் பேட்டரி குறையும் போது 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.