கூகுள் கணக்குகள் நீக்கப்படும்! வெளியான அறிவிப்பு- ஏன் தெரியுமா?
கூகுள் நிறுவனம் குறைந்தது இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நீக்கப்பட உள்ளதாக, அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூகுள் கணக்குகள் நீக்கம்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இரண்டாண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இமெயில்,யூடியூப், கூகுள் டிரைவ், மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள், அனைத்தும் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என அறிவித்துள்ளது.
@gettyimages
குறிப்பாக Google Workspace (Gmail, Docs, Drive, Meet, Calendar), YouTube மற்றும் Google Photos போன்றவற்றிலுள்ள தகவல்கள் மற்றும் புகைப்படங்களின் பாதுகாப்பிற்காக கூகுள் நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
காரணம் இது தான்
நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நீக்குவதன் மூலம், ஹேக் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமலுக்கு வந்தாலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் முதல் கணக்குகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@gettyimages
இதுபற்றி பேசிய கூகுள் நிறுவனத்தில் துணைத் தலைவர் ரூத் கிரிசெலி ‘இந்த கொள்கையானது தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும், பள்ளிகள் மட்டும் வணிக நிறுவனங்களுக்கு பொருந்தாது’ என கூறியுள்ளார்.
கணக்குகள் சில ஆண்டுகள் முன்பு துவங்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத போது கடவுச் சொற்கள் மறந்திருப்போம். அதுமாதிரியான கணக்குகளை ஹோக் செய்து, யாரேனும் தவறாக பயன்படுத்தப்படலாம்.
மேலும் ஒரு கணக்கு நீக்கப்படும் முன் முன் அறிவிப்பாக, உங்களது மெயில் ஐடிக்கு முன்னதாக தகவல் அனுப்பபடும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.