ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு 1 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கும் கூகுள்
டொனால்டு ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூகுள் நிறுவனம் வழங்குகிறது.
கூகுள் நன்கொடை
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் அமோகமாக வெற்றி பெற்றார்.
வரும் 20-ம் திகதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் நன்கொடை அளித்து வருகின்றன.
அந்தவகையில், கூகுள் நிறுவனமானது 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறது.
அதேபோல, உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் 1 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |