கூகுள் டிரைவ் ஆண்ட்ராய்டு ஸ்கேனரில் புதிய அப்டேட்: தானியங்கி மேம்படுத்தல் அம்சம் அறிமுகம்!
கூகுள் டிரைவ் தனது ஆண்ட்ராய்டு மொபைல் ஸ்கேனிங் திறன்களை புதிய தானியங்கி "மேம்படுத்தல்” அம்சத்துடன் புதிய பொலிவை கூட்டியுள்ளது.
இந்த கருவி, உங்கள் தொலைபேசியிலிருந்து நேரடியாக ஆவணங்கள், ரசீதுகள் மற்றும் அடையாள அட்டைகளின் தெளிவான, உயர்தர ஸ்கேன்களை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
எவ்வாறு வேலை செய்கிறது?
உள்ளமைக்கப்பட்ட ஸ்கேனரைப் பயன்படுத்தி ஒரு படத்தைப் பிடித்த பிறகு, பயனர்கள் முன்னோட்டத் திரையில் "மேம்படுத்தல்” விருப்பத்தைக் காண்பார்கள்.
இந்த சக்தி வாய்ந்த அம்சம் தானாகவே வெள்ளை சமநிலை சரி செய்தல், நிழல் நீக்குதல், மாறுபாடு மேம்பாடு, தானியங்கி கூர்மையாக்குதல் மற்றும் ஒளி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மேம்பாடுகளை பயன்படுத்துகிறது.
இந்த மாற்றங்கள், மெருகூட்டப்பட்ட, தொழில்முறை தோற்றமுடைய ஸ்கேனை உருவாக்க ஒன்றாக வேலை செய்கின்றன.
பயனர்கள் தங்கள் ஸ்கேன்களை JPEG கோப்புகளாக சேமிக்க அல்லது கருப்பு மற்றும் வெள்ளை filter-களை பயன்படுத்தவும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த "மேம்படுத்தல்” அம்சம் கூகுள் ஒர்க் ஸ்பேஸ்(Workspace) வாடிக்கையாளர்கள், ஒர்க் ஸ்பேஸ் தனிநபர் சந்தாதாரர்கள் மற்றும் தனிப்பட்ட கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் உட்பட அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வெளியிடப்படுகிறது.
புதிய செயல்பாட்டை அணுகுவதற்கு, பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் டிரைவ் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை நிறுவியுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |