கூகிள் ஊழியர்களுக்கு புதிய சிக்கல்... எங்கிருந்தும் வேலை செய்யலாம் என்ற கொள்கையில் திருத்தம்
கூகிள் நிறுவனம் தனது எங்கிருந்தும் வேலை செய்யலாம் (WFA) எனும் கொள்கையை திருத்தியுள்ளது, இதன் மூலம் வெளியூர்களில் வேலை செய்யத் தெரிவாகும் ஊழியர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
முழு வாரமாக
புதிய கொள்கையின் அடிப்படையில், உத்தியோகப்பூர்வ அலுவலகத்திற்கு வெளியே தொலைதூரத்தில் பணிபுரியும் ஒரு நாள் கூட, அவர்களின் வருடாந்திர WFA கொடுப்பனவிலிருந்து கழிக்கப்படும் முழு வாரமாகக் கணக்கிடப்படும்.
இந்த மாற்றமானது தொழில்நுட்பத் துறை முழுவதும் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் கொள்கைகளை மறு மதிப்பீடு செய்கின்றன.
கோவிட் பெருந்தொற்றின் போது சுந்தர் பிச்சை தலைமையிலான கூகிள் நிறுவனம் WFA கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதாவது ஊழியர்கள் தங்கள் முதன்மை அலுவலகத்திற்கு அப்பால் இருந்து வருடத்திற்கு நான்கு வாரங்கள் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் தற்போது கூகிள் நிறுவனம் இந்தக் கொள்கையை கடுமையாக்கியுள்ளது, அதற்குரிய காரணங்களாக சட்டம் மற்றும் பொருளாதாரத்தையும் பட்டியலிட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்படலாம்
தற்போது ஒரு கூகிள் ஊழியர் அலுவலகத்திற்கு செல்லாமல் ஒரு WFA நாள் அல்லது 5 WFA நாட்களை பயன்படுத்திக் கொண்டால், மொத்த ஆண்டுக்கும் என அளிக்கப்பட்டுள்ள நான்கு WFA வாரங்களில் ஒன்று கழிக்கப்படும்.
பெருந்தொற்று காலத்தில் அனுமதிக்கப்பட்ட சலுகையை ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என நிர்வாகிகள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் ஒரு நாளுக்கு ஒரு வாரத்தையே கழிக்க வேண்டுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிய விதிகளுக்கு இணங்கத் தவறும் ஊழியர்கள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் அல்லது சில சந்தர்ப்பங்களில் பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |