ஒவ்வொரு நாளும் கூகுளில் செய்யப்படும் தேடல்கள்! ஒரு ஆச்சரிய தகவல்
கூகுள் தொடங்கி 23 ஆண்டுகள் ஆகின்றன. கூகுள் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்களை காண்போம்.
கூகுள் உலகத்தின் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் ஆகும். பிங்கில் அதிகம் தேடப்பட்ட இணையதள பக்கம் ஆகும்.
கூகுள் என்ற சொல் கூகொல் என்ற சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியம் போடுவதால் வரும் எண்ணைக் குறிப்பதாகும். எவ்வளவு தரவுகளை தாங்கள் தேட விரும்புகிறோம் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த பெயரை அவர்கள் பயன்படுத்தினர்.
கூகுள் இமேஜ் தேடுதல் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது 2000ஆம் ஆண்டு ஜெனிஃபர் லோபஸ் ஜெர்மனி விருது விழாவில் அணிந்த பச்சை ஆடை அதிக தேடுதலில் இருந்தது. ஆனால் அதை பார்க்க வழியில்லாமல் இருந்தது.
ஒவ்வொரு நாளும் கூகுளில் செய்யப்படும் 15% தேடல்கள் புதிதாக தேடப்படுபவையாகும். வேறு எதிலும் தேடப்படாதவையாகும்.
ஒரு கூகுள் தேடலின் முடிவைத் தருவதற்கான கணிப்பு ஆற்றலின் (Computing power) அளவு, அப்பல்லோ 11 கலன் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புதுவதற்குத் தேவைப்பட்ட கணிப்பு ஆற்றலின் அளவுக்கு சமம்.