கூகிள் நிறுவனத்திற்கு ரூ.11,740 கோடி அபராதம் - ஏன் தெரியுமா?
கூகிள் நிறுவனம் சமீபத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சட்ட சிக்கல்களில் சிக்கி வருகிறது.
முன்னதாக குரோம் பிரவுசர் மூலம் தேடல் சந்தையை சட்டவிரோதமாக ஏகபோகமாக்கியுள்ளதாக கூறி கூகுள் நிறுவனம் மேல் வழக்கு ஒன்று பதியப்பட்டது.
கூகிளுக்கு ரூ.11,740 கோடி அபராதம்
தற்போது தனியுரிமை தொடர்பான வழக்கு ஒன்றில், கூகிள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.11,740 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் தனது தயாரிப்புகள் மூலம் பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் கூகிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூகிள் நிறுவனத்திற்கு ரூ.11,740 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
பழைய தயாரிப்புகள் தொடர்பான சில புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், வருங்காலங்களில் தனியுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு பலப்படுத்தப்படும் எனவும் கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா தெரிவித்தார்.
பயோமெட்ரிக் தரவை கசிய விட்டதாக, கடந்த ஆண்டு மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |