15 ஆண்டுகால போராட்டம்: 26,172 கோடி இழப்பீட்டை கூகுளிடம் பெறும் பிரித்தானிய தம்பதி! நடந்தது என்ன?
பிரித்தானிய தம்பதிக்கு கூகுள் நிறுவனம் 2.4 பில்லியன் பவுண்டுகள் இழப்பீடு தர தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தம்பதி தொடங்கிய இணையதளம்
Shivaun மற்றும் Adam Raff என்ற பிரித்தானிய தம்பதி Foundem என்ற விலை ஒப்பீட்டு இணையதளத்தை 2006யில் சொந்தமாக தொடங்கினர்.
பின்னர் அவர்கள் "விலை ஒப்பீடு" மற்றும் "ஷாப்பிங்" போன்ற முக்கிய சொற்களுக்கான தேடல்களை மேற்கொண்டனர்.
அப்போது கூகுளில் அவர்களின் இணையதளம் கடும் வீழ்ச்சியடைந்திருந்ததால் தம்பதியர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எதிர்பாராத வீழ்ச்சி
தங்கள் வலைதளத்தில் ஏதேனும் பிழை இருக்கலாம் என முதலில் அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் நடந்ததோ வேறு. கூகுளின் Spam Filter விதித்த அபராதத்தால் Shivaun - Adam Raff தம்பதியின் வலைதள பக்கம் எதிர்பாராத வீழ்ச்சியை அடைந்துள்ளது.
மேலும் அவர்கள் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அவர்களின் தளத்தை கூகுள் மதிப்பிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்தும் கூகுள் அபராதத்தை நீக்காததால் Foundemயின் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்தனர்.
அத்துடன் பயனர்கள் தளத்தை அணுக முடியாததால் (கூகுளின் தேடல் முடிவுகளில் மட்டும்) Foundem நிறுவனர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2010ஆம் ஆண்டில் Shivaun, Adam Raff தம்பதி ஐரோப்பிய ஆணையத்தை அணுகி புகார் அளிக்க, இதுதொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக நடந்தது.
2.4 பில்லியன் பவுண்டுகள்
இந்த நிலையில் சுமார் 15 ஆண்டுகள் கழித்து தம்பதிக்கு சாதகமாக இழப்பீடு கிடைக்கப் போகிறது.
அதாவது, 2017ஆம் ஆண்டிலேயே கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, தம்பதிக்கு 2.4 பில்லியன் பவுண்டுகள் வழங்க வேண்டும் என ஆணையம் தீர்ப்பளித்தது.
ஆனால், அதனை எதிர்த்து கூகுள் மேல்முறையீடு செய்த நிலையில் தற்போது ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்ததுடன் அபராதத்தையும் உறுதி செய்துள்ளது. அதன்படி பிரித்தானிய தம்பதிக்கு இந்திய மதிப்பில் ரூ.26,172 கோடி இழப்பீடாக கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |