உங்களது Google History-ஐ முழுமையாக அழிப்பது எப்படி? மிக எளிதான வழி இதோ
கூகுளில் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கையை எந்நேரத்திலும் பார்க்கவும், சர்ச் ஹிஸ்ட்ரியில் சிலவற்றையோ அல்லது முழுமையாகவோ அழிக்கும் வசதி நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஆப்ஷன்கள் முன்பை விட மிக எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன.
இதனை ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் இருந்தபடியே கூகுள் அக்கவுன்ட் மூலம் இயக்க முடியும். கூகுள் ஹிஸ்ட்ரி பக்கத்தின் மை ஆக்டிவிட்டி பக்கத்திற்கு சென்றால், நீங்கள் மேற்கொண்ட தேடல்களின் விவரம், பயன்படுத்திய வலைத்தளங்கள் சார்ந்த முழு விவரங்களையும் பார்க்க முடியும்.
இங்கு ஒவ்வொரு தலைப்பிலும் காணப்படும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்து அவற்றை ஹிஸ்ட்ரியில் இருந்து நீக்கிவிட முடியும்.
இந்த பட்டியலில் ஸ்கிரால் டவுன் செய்யும் போது ஒவ்வொரு நாளுக்குமான பேனரை பார்க்க முடியும். இதன் அருகே காணப்படும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்து டெலீட் ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட தினத்துக்கான ஹிஸ்ட்ரியை முழுமையாக அழித்து விட முடியும்.
உங்களது ஹிஸ்ட்ரியை தலைப்புகள், பிரத்யேக கூகுள் சேவைகள் அல்லது தேதியை வைத்தும் அழிக்க முடியும். இதற்கு மை ஆக்டிவிட்டி பேனர் அருகே இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்து டெலீட் ஆக்டிவிட்டி பை ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இந்த ஆப்ஷனில் கீபோர்டு மூலம் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கூகுள் சேவைகளை சர்ச் செய்து அழிக்க முடியும். குறிப்பிட்ட தலைப்பில் அனைத்து தேடல்களையும் அழிக்க டேட்டா ரேன்ஜ் ஆப்ஷனில் உள்ள ஆல் டைம் ஆப்ஷனை க்ளிக் செய்து முழுமையாக அழித்து விடலாம்.
கூகுள் உங்களை பற்றி சேகரிப்பதை தேர்வு செய்யலாம் மை ஆக்டிவிட்டி பக்கத்திற்கு சென்று மூன்று புள்ளிகளை கொண்ட பட்டனை க்ளிக் செய்து, ஆக்டிவிட்டி கன்ட்ரோல் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இங்கு கூகுள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் தகவல்களை தேர்வு செய்து அவற்றை உங்களது விருப்பப்படி இயக்க முடியும்.