கூகுள் நிறுவனத்தின் அசத்தல் அப்டேட்: பாஸ்வேர்ட்களுக்கு மாற்றாக இனி பாஸ்கீ முறை அறிமுகம்
கூகுள் நிறுவனம் பாஸ்வேர்டுகளுக்கு மாற்றாக பாஸ்கீ என்ற புதிய முறையை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
கூகுள் நிறுவனம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இணைய பயனர்களின் நம்பிக்கையை பெற்று வலம் வருகிறது, அதே வேளையில் இந்த நம்பிக்கை தக்கவைத்து கொள்ள கூகுள் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு பல்வேறு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் பயனர்களின் அக்கவுண்ட் லாக்-இன்(login) முறைக்கு புதிய பாஸ்கீ(Passkey) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Ron Amadeo
பழைய பாஸ்வேர்ட் முறையில் எளிதாக பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டு லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் உள்ள விவரங்களை திருட முடியும், இவ்வாறு பாஸ்வேர்ட்கள் திருடப்படாமல் இருப்பதற்காகவே வலுவான பாஸ்வேர்ட்களை வைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
எப்படி இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இந்த முறை பாதுகாப்பு இல்லாததாகவே பார்கக முடிகிறது.
பாஸ்கீ (Passkey)
கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பாஸ்கீ (Passkey) லாக்-இன் முறை, தகவல்களை கூடுதல் சிரத்தை எடுத்து பாதுகாக்கிறது, ஏனென்றால் இவற்றை மறுமுறை பயன்படுத்த முடியாது, எங்கும் லீக்கும் ஆகாது.
Getty
இந்த பாஸ்கீ வெவ்வெறு பிரவுசர்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் இருந்தும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பாஸ்கீகளை ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகளில் என அனைத்திலும் பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்கீ செயல்படும் முறை
பயனர்கள் தங்களது கூகுள் அக்கவுண்ட்டில் உள்ள பாஸ்வேர்ட் மேனேஜர் பகுதிக்கு சென்று அவர்களது புதிய பாஸ்கீ விவரங்களை சேமித்து வைத்து கொள்ளலாம்.
இதன் மூலம் பயனர்கள் பேஸ் அன்லாக், ஸ்கிரீன் லாக் பின், ஃபிங்கர் பிரிண்ட் ஆகியவற்றின் மூலம் அவர்களது கணக்குகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
GOOGLE VIA DAVID NIELD
இந்த பாஸ்கீ முறை மூலம் இனி பயனர்கள் தங்களது பாஸ்வேர்ட்களை கஷ்டப்பட்டு ஞாபகம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.