இனி படம், வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டதா என கண்டறியலாம் - கூகிளின் புதிய கருவி
இனி படம், வீடியோ, ஒலி கோப்புகள் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய கூகிள் புதிய டிஜிட்டல் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
AI உள்ளடக்கங்கள்
AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், AI செயலிகள் மூலம், படங்கள், வீடியோ, ஒலி கோப்புகளை உருவாக்க முடிகிறது.

சில AI செயலிகள் உருவாக்கும் படங்கள், வீடியோ, ஒலிகள் சில நேரம் உண்மையானதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியாத வகையில் தத்ரூபமாக அமைந்திருக்கும்.
இதனால், பல மோசடி, குற்ற சம்பவங்களும் கூட நடைபெறுகின்றன.
கூகிள் வெளியிட்டுள்ள SynthID detecter
இதற்கு முடிவு காட்டும் வகையில், படங்கள், வீடியோ, ஒலி கோப்புகள் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறியும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில், கூகுள் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சோதனைப் பதிப்பை வழங்கியது. தற்போது அனைத்து பொதுமக்களுக்கும் அதை பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது.
SynthID Detector is now available to everyone. 🌐 Check whether online content was generated using @GoogleAI, or with tools from our industry partners – including @OpenAI, @NVIDIA, Kakao and coming soon, @Apple. Try it out → https://t.co/cPW2aNnqr6 https://t.co/TGYA0uZ0dx
— Google DeepMind (@GoogleDeepMind) October 7, 2026
synthid.com என்ற இணையத்தளத்தில், படங்கள், வீடியோ, ஒலி கோப்புகளை உள்ளிட்டால் அது AI மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது திருத்தப்பட்டதா என்பதை கண்டறிய முடியும்.

பெரும்பாலான AI செயலிகள் படங்கள், வீடியோ, ஒலி கோப்புகளை உருவாக்கும் போது அது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை அடையாளம் காண SynthID என்ற மனிதர்களின் கண்ணனுக்கு புலப்படாத வாட்டர்மார்க்கை பதிக்கும்.
synthid.com என்ற இணையத்தளத்தில் படங்கள், வீடியோ, ஒலி கோப்புகளை பதிவேற்றும் போது அது SynthID உள்ளதா என அடையாளம் கண்டு அதன் மூலம், அது AI மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது திருத்தப்பட்டதா என்பதை அறிவிக்கும்.
இதில், கூகிள் மட்டுமல்லாது, OpenAI, Nvidia மற்றும் Kakao ஆகியவையும் இதை ஆதரிக்கின்றன. விரைவில் ஆப்பிளும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.